இணையத்தில் உலாவுவதன் மூலமாகவே ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் இணையத்தில் உலாவும் போது ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள Toucan உதவுகிறது. வகுப்புகள், ஃபிளாஷ் கார்டுகள் அல்லது கல்வி அமர்வுகள் என எதுவும் இதில் இல்லை. வெறுமனே பதிவுசெய்து, வழக்கம்போல உங்கள் நாளைச் செலவிடுங்கள்.
இது எப்படி வேலைசெய்கிறது
➤ நீங்கள் ஓர் இணையதளத்தைப் பார்வையிடும்போது, Toucan அந்த இணையப் பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட சில வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் நீங்கள் கற்றுக்கொள்ள முயற்சிக்கும் மொழிக்குத் தானாகவே மொழிபெயர்க்கிறது. அந்த முறையில் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மொழியின் சூழலுக்குப் பொருத்தமான வார்த்தைகளை உங்களுடைய புதிய மொழியில் நீங்கள் கற்றுக்கொள்ளமுடியும்.
கிடைக்கப்பெறும் மொழிகள்:
ஆங்கிலம் (ஸ்பேனிஷ் பேசுபவர்களுக்காக)
ஸ்பேனிஷ்
பிரெஞ்சு
ஜப்பானீஷ்
ஜெர்மன்
கொரியன்
போர்த்துக்கீஷ்
இத்தாலியன்
அரபிக்
சைனீஷ் (மாண்டரின்)
ஹீப்ரூ
இந்தி
மேலும் பல மொழிகள் வரவிருக்கின்றன!
சில வினாடிகளில் இதை நிறுவலாம்
➤ இதைத் தொடங்குவதற்கு இரண்டு கிளிக்குகள் மட்டுமே தேவைப்படுகின்றன
இணையத்தில் உலாவுங்கள்
➤ உங்களுடைய அறிவைக் கட்டமைக்கும் பொருட்டு, முக்கிய வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் Toucan தானாகவே மொழிபெயர்க்கிறது
உங்களுக்குப் பொருத்தமான வேகத்தில் கற்றுக்கொள்ளுங்கள்
➤ நீங்கள் மேலும் சரளமாகப் பேசக் கற்றுக்கொள்ளும் போது, Toucan புதிய வார்த்தைகளையும், மிகவும் சிக்கலான சொற்றொடர்களையும் நீங்கள் கற்றுக்கொள்ளும் பொருட்டு உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது
நீங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பயிற்சி செய்து பாருங்கள்
➤ உங்களுடைய புதிய சொல்வளத்தைச் சோதனை செய்யும் பொருட்டு சிறிய கேம்களை விளையாடி, உங்களுடைய திறமைகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள்
மொழிபெயர்க்க ஹைலைட் செய்யுங்கள்
➤ ஏதேனும் ஒரு வார்த்தையையோ, சொற்றொடரையோ தேர்வுசெய்யும் போது, Toucan அவற்றை நீங்கள் கற்க முயற்சிக்கும் மொழிக்கு உடனே மொழிபெயர்க்கும்.
உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், info@jointoucan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உங்களுக்கு விருப்பமான அனைத்து இணையதளங்களிலும் Toucan தொடர்ந்து செயலாற்ற உதவி செய்யுங்கள்.
*************** உங்களுடைய தனியுரிமையே TOUCAN இன் முதன்மையான முன்னுரிமை ஆகும் ***************
நீங்கள் Toucan ஐச் சேர்க்கும் போது, அது ”நீங்கள் பார்வையிடும் இணையதளங்களில் உங்களுடைய அனைத்து தரவுகளையும் எங்களால் வாசிக்கவும், மாற்றியமைக்கவும் முடியும்” எனச் சொல்லும். அது பகுதியளவுக்கு மட்டுமே உண்மையானதாகும். அது ஓர் இணையப்பக்கத்தில் நீங்கள் பார்க்கும் வார்த்தைகளை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழிக்கு மொழிபெயர்க்க Toucan ஐ அனுமதிக்கிறது என்பதே அதற்கான மிகவும் துல்லியமான விளக்கம். நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு நபராக இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உறுதி செய்யும் அதே வேளையில், நீங்கள் எது குறித்து தேடுதல் மேற்கொள்கிறீர்கள் அல்லது எதை வாங்குகிறீர்கள் என்பதைக் கண்டறிவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. அது எங்களுடைய நோக்கமும் அல்ல.
Toucan இன் தனியுரிமைக் கொள்கை குறித்து https://jointoucan.com/privacy என்பதில் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.