தொழுகை நேரங்களை எளிதாக அறிந்து கொள்வதற்கும், அடுத்த தொழுகைக்கான மீதமுள்ள நேரத்தை அறிவதற்கும்.
✔️ இலவச, இலகுரக, பாதுகாப்பான மற்றும் திறந்த மூல: github.com/smartazanclock/ptx
✔️ தொழுகை நேரங்கள் நீங்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அல்லது நீங்கள் உள்ளிடும் இடத்தின் அடிப்படையில் காட்டப்படும்.
✔️ ஐகான் சின்னமானது அடுத்த தொழுகை நேரம் வரையிலான மீதமுள்ள நேரத்தை காட்டுவதோடு, கடைசி மணித்தியாலத்தில் சிவப்பு நிறமாக மாறும்.
✔️ பாங்கு அழைக்காமல் அமைதியாக தொழிற்படும்.
✔️ பகலொளி சேமிப்பு நேர (DST) மாற்றங்கள் தானாக கையாளப்படும்.
✔️ ரமலான் காலத்தில் இஃப்தாருக்கான மீதமுள்ள நேரத்தைக் காட்டும்.
✔️ கிரிகோரியன் மற்றும் ஹிஜ்ரி திகதிகள் இரண்டையும் காட்டும்.
✔️ ஒவ்வொரு தொழுகை நேரத்திற்கும் மற்றும் ஹிஜ்ரி திகதிக்குமான சரியீடு செய்தல்கள் (ஆஃப்செட்கள்) வரையறுக்கப்படலாம்.
✔️ ஹனஃபி மத்ஹப் பிரகாரம் தாமதிக்கப்பட்ட அஸர் தொழுகை நேரத்திற்கான தெரிவு.
✔️ இஷா தொழுகைக்குரிய நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு, நள்ளிரவு மற்றும் கடைசி மூன்றில் ஒரு பங்கு ஆகிய குறிகாட்டிகளைக் காட்டும்.
✔️ நேரங்கள் 12 மணிநேர வடிவமைப்பில் காட்டப்படுகிறது. தொழுகை நேரப் பகுதியைக் கிளிக் செய்வதன் மூலம் 24 மணிநேர வடிவமைப்பிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
பின்பற்றப்படும் கணக்கீட்டு முறைகள் :
- வட அமெரிக்க இஸ்லாமிய சங்கம்.
- உலக முஸ்லிம் லீக்.
- எகிப்திய பொது ஆய்வு ஆணையம்.
- உம்முல் குரா பல்கலைக்கழகம், மக்கா.
- துருக்கியின் மத விவகாரங்களுக்கான தலைமையகம்.
- அல்ஜீரிய மத விவகார அமைச்சு.
- துனிசிய மத விவகார அமைச்சு.
- பிரான்ஸ் UOIF - 12 டிகிரி கோணம்.
- 12 டிகிரி கோணம்.
- மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (JAKIM).
- இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகம், கராச்சி.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் / துபாய்.
- தெஹ்ரான் பல்கலைக்கழகம்.
வடிவமைக்கப்பட்ட அதான் கடிகாரங்களுக்கு இவ்விணைப்பை பார்க்கவும் – smartazanclock.com.
இன்ஷாஅல்லாஹ்! இந்த நீட்டிப்பு உங்கள் நாளை சிறப்பாக ஒழுங்கமைக்க உதவும் என்று எதிர்பார்க்கின்றோம்.